செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட 554 மனித எலும்புக்கூடுகள்
15 ஆவணி 2026 சனி 20:09 | பார்வைகள் : 162
இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் . 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 52 வது நாளான இன்று (14) புதிதாக 2 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 554மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 547 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
2 குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படாத 6 குழிகள் 1 மீற்றர் அகலமும் 1 மீற்றர் நீளமும் கொண்டவை தோண்டப்பட்ட தில், 3 குழிக்குள் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire