Crédit Agricole வாடிக்கையாளர்களை குறிவைத்த சைபர் மோசடி – 912 நபர்களின் வங்கி தகவல்கள் திருட்டு!!
16 ஆவணி 2026 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 170
முக்கிய வங்கிகளில் ஒன்றான Crédit Agricole பெயரைப் பயன்படுத்தி, கடந்த ஜூன் மாதம் ஹேக்கர்கள் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1,000 வாடிக்கையாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடியில், வங்கியின் பெயரில் தினமும் சுமார் 7,000 போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக சைபர் பாதுகாப்பு ஊடகமான Cybernews தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சல்கள் சந்தேகத்திற்கிடமானவை என அடையாளம் காணப்படாத வகையில், நிறுவனங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பும் சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று தோற்றமளிக்கும் போலி இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, வங்கிக் கணக்கு உள்நுழைவு தகவல்களை வழங்குமாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் 912 பேர் தங்களது வங்கி உள்நுழைவு தகவல்களை போலி படிவங்களில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்பு, உள்ளூர் வங்கிக் கிளை மற்றும் வங்கி ஆலோசகரின் பெயர் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, வங்கி ஊழியர்களைப் போல் தொலைபேசியில் தொடர்புகொண்டு போலி சேவைகளுக்காக பணம் செலுத்துமாறு ஏமாற்றியுள்ளனர். இதன் மூலம் சுமார் 83 பணப்பரிவர்த்தனைகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக Crédit Agricole தெரிவித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி ஆலோசகர் ஒருபோதும் தொலைபேசியில் வங்கி உள்நுழைவு தகவல்களையோ அல்லது பணப்பரிமாற்றத்தை உறுதிப்படுத்தும் தகவல்களையோ கேட்கமாட்டார். எதிர்பாராத தொலைபேசி அழைப்பு வந்தால் அழைப்பைத் துண்டித்து, அந்த எண்ணைத் தடுக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியில் வரும் இணைப்புகளைப் பயன்படுத்தாமல், வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி அல்லது இணையதளம் மூலம் நேரடியாக தொடர்புகொள்வது பாதுகாப்பானது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire