Paristamil Navigation Paristamil advert login

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 7 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 7 பேர் பலி

16 ஆவணி 2026 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 155


லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் நபடிஹா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனினும், ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்–ஹிஸ்புல்லா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.