Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் - உயிரிழப்பு 38 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் - உயிரிழப்பு 38 ஆக அதிகரிப்பு

16 ஆவணி 2026 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 163


இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் 15.08.2026 அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவில்  7.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டஜன் கணக்கான பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளை சென்றடைய தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் பல பகுதிகளில் ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்தில் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.