இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை!
16 ஆவணி 2026 ஞாயிறு 19:03 | பார்வைகள் : 153
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் உண்மையான வெப்பநிலையுடன் ஈரப்பதத்தையும் இணைத்துக் கணக்கிடும்போது மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவே வெப்பச் சுட்டெண் என குறிப்பிடப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை மட்டத்தில் நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பது அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுவது சோர்வை ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து உடல் உழைப்பில் ஈடுபட்டால் வெப்பத்தால் ஏற்படும் தசைப்பிடிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire