காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆணின் சடலம்
16 ஆவணி 2026 ஞாயிறு 19:08 | பார்வைகள் : 156
கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16) ஞாயிற்றுக்கிழமைகாலை கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரை ஒதுங்கிய சடலம் சிதைந்த நிலையில் காணப்படுவதால், உயிரிழந்தவர் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போது இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையும் மற்றும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்துள்ளார்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியவும், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவும் கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire