கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: முதல்வர் விஜய் கண்டனம்
17 ஆவணி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 180
கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலை காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இந்தக் கொடூர சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கர்நாடக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire