Paristamil Navigation Paristamil advert login

தவெக அரசின் 100 நாள் ஆட்சி: முதல்வர் விஜய் வெளியிட்ட திட்டங்களின் பட்டியல்

தவெக அரசின் 100 நாள் ஆட்சி: முதல்வர் விஜய் வெளியிட்ட திட்டங்களின் பட்டியல்

17 ஆவணி 2026 திங்கள் 10:15 | பார்வைகள் : 183


தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு, முதல்வர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், **‘100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் ஆட்சி: ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி

முதல்வர் விஜய் பட்டியலிட்டுள்ள அரசின் திட்டங்கள் பின்வருமாறு:

* **சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை**
* **தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்:** ரூ.560 கோடி ஒதுக்கீடு.
* **வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026:** ரூ.1 லட்சம் கோடி முதலீடு.
* **717 மதுபானக் கடைகள் மூடல்.**
* **வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்:** 12 லட்சம் மாணவர்களுக்கும், 1 லட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி.
* **TN-VETTRI (கிராமப்புற மறுமலர்ச்சி):** சுகாதாரம், குடிநீர் மற்றும் சாலைகள் மேம்பாட்டிற்காக ஆண்டுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.
* **போதைப் பொருள் ஒடுக்குவதற்காக 65 சிறப்பு அதிரடிப்படைகள்.**
* **அண்ணனின் சீர் திருமண நன்னாளில்:** 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.
* **கரும்பு:** டன் ஒன்றுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை.
* **நெல்:** குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை.
* **வெற்றி வீடு திட்டம்:** ரூ.3,500 கோடி ஒதுக்கீடு.
* **வெற்றி 150:** 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு.
* **வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்.**
* **200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்.**
* **பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்:** ரூ.710 கோடி ஒதுக்கீடு.
* **விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி.**
* **வெற்றி மடிக்கணினித் திட்டம்:** ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
* **அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு:** ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள்.
* **வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகம்:** பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி வழங்குதல் மற்றும் நேரடி தொடர்பற்ற பத்திரப் பதிவு.