போலி தகவல்களை எதிர்கொள்ள மத்திய அரசு துறைகளில் விரைவு குழுக்கள்
17 ஆவணி 2026 திங்கள் 11:29 | பார்வைகள் : 148
சமூக வலைதளங்களில் மத்திய அரசின் துறைகள் தொடர்பாக பரப்பப்படும் போலியான, திரிக்கப்பட்ட தகவல்களுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில், ஒவ்வொரு அரசு துறையிலும் தனித்தனியாக ‘கியூ.ஆர்.டி.’ எனப்படும் விரைவு பதில் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அரசு தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக வேகமாகப் பரவி வருகின்றன. இதில், அரசு கொள்கைகள், திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பாக தவறான அல்லது பொய்யான தகவல்கள் பரப்பப்படும்போது, அவற்றுக்கு தாமதமின்றி உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே ‘பி.ஐ.பி.’ எனப்படும் செய்தி தொடர்பு அமைப்பில் உண்மை கண்டறியும் குழு செயல்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் பெயரில் சமூக வலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டு, அவற்றின் வாயிலாக மக்களுக்கு தகவல் அளிக்க குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களுக்குத் தேவையான தகவல் மற்றும் ஒருங்கிணைப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு வழங்கி வருகிறது. இருப்பினும், பொய்யான அல்லது போலியான தகவல்கள் வெளியிடப்படுவதை கண்காணித்து, அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கும் வசதி இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், புதிதாக துறை வாரியாக ‘கியூ.ஆர்.டி.’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு பதிலளிக்கும் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் ஏற்கனவே செயல்படும் பொதுவான அமைப்புக்கு மாற்றாக இருக்காது. மாறாக, சம்பந்தப்பட்ட துறையின் விவகாரங்களை உடனடியாக சரிபார்த்து, உண்மை நிலையைத் தயாரிப்பதற்கான கூடுதல் ஏற்பாடாக செயல்படும்.
### அவசியம்
ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பான தவறான தகவல் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவும்போது, பொதுவான உண்மை கண்டறியும் அமைப்புகள் மூலம் தகவல்களைச் சேகரித்து பதிலளிக்க காலதாமதம் ஏற்படுகிறது.
அதற்குள், போலி தகவலை உண்மை என நம்பி பலரும் ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதை பரப்பத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு அமைச்சகம் அல்லது துறையின் பணிகள், திட்டங்கள், கொள்கைகள் குறித்து நேரடியாக அறிந்த அதிகாரிகள் அடங்கிய ‘கியூ.ஆர்.டி.’ எனப்படும் விரைவு பதில் குழுவை அமைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
மின்சாரத் துறை தொடர்பான தவறான தகவல் என்றால், அந்தத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை அறிந்த அதிகாரிகள் அதை சரிபார்ப்பார்கள்.
அதேபோல், உரம் தொடர்பான தகவல்களை அந்தத் துறையைச் சேர்ந்த குழுவும், வர்த்தகம் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட துறையின் குழுவும் ஆய்வு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், ஒரு தகவல் உண்மையா அல்லது தவறானதா என்பதை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளே விரைவாகப் பரிசீலித்து உண்மை நிலையைத் தெரிவிக்க முடியும்.
### எப்படி செயல்படும்?
ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறையின் சமூக வலைதள, டிஜிட்டல் ஊடகக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். அந்தத் துறை தொடர்பான கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள், முடிவுகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்த பதிவுகள் கண்காணிக்கப்படும்.
அப்போது, ஏதேனும் ஒரு பதிவு போலியானதாகவோ, தவறாக வழிநடத்துவதாகவோ, உண்மைக்கு மாறானதாகவோ, திருத்தப்பட்டதாகவோ அல்லது அதன் உண்மையான பின்னணியில் இருந்து விலகி வெளியிடப்பட்டதாகவோ இருப்பது தெரியவந்தால், அது உடனடியாக அந்தத் துறையின் விரைவு பதில் குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களும் இதே முறையில் குழுவிடம் தெரிவிக்கப்படும். இதையடுத்து, சரியான பதில் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்:
“சமூக வலைதளங்களில் தவறான தகவல், வதந்தி அல்லது போலி பதிவுகள் பரவும்போது, அவற்றுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் மக்களிடம் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை.
“புதிய நடைமுறையின்படி, ஒரு போலி தகவல் சமூக வலைதளத்தில் பரவியதும், முதலில் அந்தந்த துறையின் சமூக வலைதளக் குழு அதை கண்டறியும். பின்னர், அது விரைவு பதில் குழுவுக்கு அனுப்பப்படும்.
“குழு அந்தத் தகவலைச் சரிபார்த்து, உண்மை நிலையைத் தயாரிக்கும். தேவைப்பட்டால், பி.ஐ.பி. உண்மை அறியும் பிரிவுடன் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire