Paristamil Navigation Paristamil advert login

பாரிஸ் கபே படத்துக்கும் பாரிஸ்க்கு என்ன தொடர்பு ?

 பாரிஸ் கபே படத்துக்கும் பாரிஸ்க்கு என்ன தொடர்பு ?

17 ஆவணி 2026 திங்கள் 15:15 | பார்வைகள் : 153


சரஜ்சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் நடித்த "பாரிஸ் கபே" படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. "முகமூடி" கே இசையமைத்துள்ளார். படம் குறித்து குரு சோமசுந்தரம் பேசுகையில், ""பெண்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேறாது. இந்த படத்திலும் முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறோம். இதில் என் மனைவியாக அனுமோல் நடித்து இருக்கிறார். இதற்கு முன் ஒரு மலையாள படத்தில் நாங்கள் இணைந்து நடித்து இருக்கிறோம். அவர் சிறப்பாக நடிப்பார். இப்போது கூட உங்களை விட இன்னொரு நடிகை அழகு என கலாய்த்தேன்"" என்றார்.

அனுமோல் பேசுகையில் ""குருசோமசுந்தரம் நடிப்பை மின்னல் முரளி உள்ளிட்ட மலையாள படங்களில் பார்த்து ரசித்து இருக்கிறேன். இசையமைப்பாளர் கே சில மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. அந்த பட பாடல்கள் ஹிட். பாரிஸ் கபே படத்துக்கும் பாரிஸ்க்கு என்ன தொடர்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்"" என்றார்.