Paristamil Navigation Paristamil advert login

நடிகர் யஷ் ராவணனாக நடிக்க விரும்பியது ஏன்? -

நடிகர் யஷ்  ராவணனாக நடிக்க விரும்பியது ஏன்? -

17 ஆவணி 2026 திங்கள் 15:22 | பார்வைகள் : 155


ராமாயணம்’ படத்தில் ராமராக நடிப்பதை விடுத்து, ராவணனாக நடித்தது ஏன்? என்பது குறித்து நடிகர் யஷ் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக நடிகர் யஷ் அண்மையில் அளித்த பேட்டியில், “ராமரின் புனிதத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ராவணனின் அரக்க குணத்தை அழுத்தமாக காட்சிப்படுத்த வேண்டும். நான் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தாலும், எனக்கு எந்த நல்லதும் நடப்பதில்லை.
 

நாங்கள் அனைவரும் எங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டோம். நான் நட்சத்திர நடிகர் என்பதோ, ராமாயணம் படத்தில் நடித்தேன் என்பதோ முக்கியமில்லை. படத்துக்காக அனைவரும் சேர்ந்து உழைப்பை செலுத்தியிருக்கிறோம்” என்றார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணம்’. இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். சீதையாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராவணனாக யஷ் நடித்துள்ள இந்தப் படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. ஹன்ஸ் ஜிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது.