Paristamil Navigation Paristamil advert login

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில்  ஏற்படும்  மாற்றங்கள்  பற்றி  தெரியுமா?

17 ஆவணி 2026 திங்கள் 15:31 | பார்வைகள் : 321


பெரிய நெல்லிக்காய் சாப்பிட கசப்பாக இருந்தாலும் உடலுக்கு பல வித பலன்களை அள்ளித் தருகிறது. காலை எழுந்தவுடன் டீ, காபி போன்ற பானங்களை விட்டு நெல்லிக்காய் ஜூஸ் அல்லது ஒரு நெல்லிக்காயை தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவது நம்மால் கண்கூடாக பார்க்க முடியும்.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்காயில் எட்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது. இதனை கருப்பு உப்புடன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பாதிப்புகள் உள்ளவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிட்டாலே நல்ல ஒரு மாற்றத்தை உணர‌முடியும்.

தலைமுடி உதிர்வை தடுத்து தலை முடி நன்றாக வளரவும் அடர்த்தியாக வளரவும் உதவுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து மற்றும் பருக்கள் குறைந்து சருமம் பொலிவு பெற செய்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகரிக்க இதனை சாப்பிடலாம். சளி, இருமல், போன்ற வைரஸ் காய்ச்சலை பாதிப்புகளை நமது உடலை தொட விடாமல் தடுக்கிறது.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை கலப்பை தடுத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திடச் செய்யும். கண்பார்வை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நம்மை நெருங்கவிடாமல் தடுக்கும். கண்ணில் ஏற்படும் வறட்சியை தடுத்து கண்பார்வை தெளிவாக இருக்க உதவும்.

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவினை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திடச் செய்கிறது. வாய்ப்புண், வாய் துர்நாற்றம், பற்களின் ஈற்களில் இரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

இரத்த சோகை பாதிப்பினை தடுக்கும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை குறையாமல் பாதுகாக்கும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடை குறைக்க உதவும். மன அழுத்தத்தை குறைக்கும் என்பதால் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.