ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு
18 ஆவணி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 153
தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல் அமைச்சர் விஜய், விவசாயிகளுக்கான கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
உலகில் ஜாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நடைபெறும் தொழில் விவசாயத் தொழில் மட்டுமே. உலகின் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், மற்றொரு பகுதியில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. எந்த நாடு உழவுத் தொழிலுக்கு மதிப்பளித்து, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குகிறதோ, அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது. இருப்பினும், பதவியேற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக, கடந்த 25.05.2026 அன்று குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டன. நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழுத் தள்ளுபடி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வரம்பு உயர்த்தப்பட்டது.
அதன்படி, ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையும், ரூ.75,000-க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000-மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.06.2026 அன்று ஆணையிடப்பட்டது.
இதில், 31.07.2026 வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடி தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, 07.08.2026 அன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன.
### செலுத்த வேண்டிய தொகை
கடந்த காலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோதும், அரசு கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை 4 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்தது. 2021-ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, 2021 முதல் 2026 வரையிலான காலத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய அரசுக்கு அந்த அளவிலான கால அவகாசம் இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 தேதியிட்ட கடிதத்தில், அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாகச் செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த வழிகாட்டுதலையும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
### மொத்தமாக ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
அதன்படி:
* ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
* ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
* ரூ.1,00,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இதன்மூலம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால், ஏற்கனவே பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக ரூ.40,000 வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தபோதிலும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் அரசின் நலனும் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire