வனத்துறை அமைச்சர் பேச்சு: எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்
18 ஆவணி 2026 செவ்வாய் 06:16 | பார்வைகள் : 180
நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
முன்னதாக, சட்டசபையில் கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. இதனைத் தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அப்போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அவரது பேச்சுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு பேசினார். இதனால் அவரை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, வனத்துறை அமைச்சரின் மைக் இணைப்பை துண்டிக்கும்படியும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதன் பின்னர் முதல் அமைச்சர் விஜய் பேசுகையில், “வனத்துறை அமைச்சர் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. அவர் சார்பில் எதிர்க்கட்சிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire