ஸ்டாலின் வரும்போது இங்கு பலர் இருக்க மாட்டார்கள்: சாத்தூர் ராமச்சந்திரன்
18 ஆவணி 2026 செவ்வாய் 07:19 | பார்வைகள் : 172
வருவாய் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கொள்கைப் பிடிப்பையும், மு.க.ஸ்டாலினின் செயல்திறனையும் ஒருங்கே பெற்று, எந்த ஆதிக்கத்துக்கும் அஞ்சாமல் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
தி.மு.க.வுக்கு 75 வயது. கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் போராட்டங்களில் பங்கேற்று, மக்களுக்காக சிறை சென்றவர்கள். கொள்கையில் அனைவரிடமும் சிறந்து விளங்கும் கட்சி எங்களுடையது.
கடந்த 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு அரசு மனைப்பட்டா வழங்கியுள்ளோம். சென்னை போன்ற மாநகராட்சிகளில் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களில் 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், கொரோனா காலத்திலேயே மக்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கினோம். ஆனால், தவெக அரசு அளித்த வாக்குறுதிகளில் எதையும் 3 மாதங்களில் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 கிடைக்கும், வீட்டில் வேலையில்லாமல் இருந்தால் ரூ.4,000 கிடைக்கும், சிலிண்டர் கிடைக்கும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ‘இதெல்லாம் நீங்கள் வந்தால் கிடைக்குமா?’ என்று மக்கள் கேட்கின்றனர். ஆனால், இதுவரை எதுவும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
### அனல் பறந்த விவாதம்
தொடர்ந்து பேசிய அவர், “மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வரும். விழுந்த வேகத்தில் எழுந்து நிற்கும் கட்சி தி.மு.க. நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ‘அப்பாவை காணோம்’ என்று சொல்கிறீர்கள். அவர் வருகின்ற நேரத்தில் நீங்கள் பல பேர் இங்கே இருக்க மாட்டீர்கள்; நாங்கள் இருப்போம்” என்று கூறினார்.
இதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், “விஜய் இருக்கும் வரை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. தி.மு.க.வுக்கு இனி எப்போதும் எதிர்க்கட்சி வரிசைதான். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தவரை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை தி.மு.க. வெற்றி பெறவில்லை என்பதுதான் வரலாறு” என்று கூறினார்.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என்.நேரு பதிலளிக்கையில், “எம்.ஜி.ஆர். இருக்கும்போதுதான் 1980-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1986-ல் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றது” என்று கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த செங்கோட்டையன், “நீங்கள் (தி.மு.க.) நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கலைத்தீர்கள். அதன் பிறகும் வெற்றி பெற்று நிரந்தர முதல்-அமைச்சராக வரலாறு படைத்தவர் எம்.ஜி.ஆர்.” என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire