2027 ஜனாதிபதித் தேர்தல்: போட்டியிலிருந்து விலகிய Gérald Darmanin – Édouard Philippeக்கு ஆதரவு!!
18 ஆவணி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 581
நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்கனவே சமூக ரீதியாக கடினமான சூழ்நிலை நிலவி வருவதால், மேலும் அரசியல் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை எனக் கூறிய அவர், முன்னாள் பிரதமரும் ஜனாதிபதி வேட்பாளருமான எட்வர்ட் பிலிப்புக்கு தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
எட்வர்ட் பிலிப் தன்னை அமைச்சராக நியமிக்க வழிவகுத்தவர் என்றும், அவரிடம் ஒரு அரசுத் தலைவருக்குத் தேவையான பண்புகளும் ஆட்சியனுபவமும் இருப்பதாகவும் தர்மனின் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர் எட்வர்ட் பிலிப் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, 2027 தேர்தலுக்கான மத்திய அணியின் வேட்பாளர்களில் கருத்துக்கணிப்புகளில் எட்வர்ட் பிலிப் முன்னிலையில் உள்ளார்.
Tourcoing நகரில் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி தனது நான்காவது அரசியல் கூட்டத்தை நடத்துவதற்கு தர்மனின் தயாராகி வருகிறார். 2024ஆம் ஆண்டிலேயே தனது ஜனாதிபதி வேட்புமனுவை அறிவித்திருந்த எட்வர்ட் பிலிப், ஆகஸ்ட் 21 முதல் 25 வரை Mayotte மற்றும் La Réunion பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை, 2027 தேர்தலுக்கு முன்னதாக மத்திய மற்றும் சீர்திருத்தவாத அரசியல் அணிகளை ஒன்றிணைப்பது தொடர்பான முயற்சிகளும் தீவிரமடைந்து வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire