அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: சபாநாயகர் விளக்கம்
18 ஆவணி 2026 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 219
அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள், உரிய விசாரணை நடத்திய பின்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.
அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளின் விசாரணையின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது விருப்பத்தின் பேரில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை சபாநாயகர் விசாரித்திருக்க வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பாக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தபோதும், அவர் வழக்கை எதிர்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire