30 மணி நேரம் பறக்கும் தாக்குதல் ட்ரோன்கள்: இந்திய கடற்படை குத்தகை
18 ஆவணி 2026 செவ்வாய் 12:59 | பார்வைகள் : 204
இந்திய கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்க, ரூ.1,943 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், நவீன சென்சார்கள் மற்றும் பல்வேறு திறன் கொண்ட கருவிகள் மூலம் கடல் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ரூ.1,943 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, இந்திய கடற்படைக்கு இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்கள் 30 மாதங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படும்.
நீண்ட நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள், இந்திய கடற்படையின் கடல்சார் கண்காணிப்பு திறனை மேலும் மேம்படுத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு என்ன?
* MQ-9B Sea Guardian ட்ரோன்கள் நீண்ட நேரம் வானில் பறந்து உளவு பார்ப்பது மற்றும் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 30 மணி நேரத்துக்கும் மேலாக பறக்கக்கூடியதுடன், 40,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இயங்கும் திறன் கொண்டவை. மேலும், பரந்த கடல் மற்றும் நிலப்பரப்புகளை கண்காணிக்க முடியும்.
* சுமார் 450 கிலோ எடையுள்ள குண்டுகளை சுமந்து செல்லும் திறனும் இவற்றுக்கு உள்ளது.
* தரைப்பகுதிகளைத் தாக்குதல் மற்றும் உளவு பார்த்தல் பணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன்களை குத்தகைக்கு எடுப்பதன் மூலம், கடற்படைக்கு கூடுதல் உயர்தர கண்காணிப்பு திறன் கிடைக்கும்.
* தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம், பரந்த கடல்சார் பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் இந்த ட்ரோன்கள் கடற்படைக்கு உதவும்.
ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு சீ கார்டியன் ட்ரோன்களை இந்திய கடற்படை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire