ரஷ்ய தலைநகரை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்
18 ஆவணி 2026 செவ்வாய் 12:40 | பார்வைகள் : 229
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணி வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து சுமார் 620 உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தயுள்ளன.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட முன்னோடி இல்லாத மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும்.
மாஸ்கோ நகர மேயர் செர்கே சோபியான்னின் தகவல்படி, கிட்டத்தட்ட 180 ட்ரோன்களை ரஷ்ய வான் படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி அழித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் மாஸ்கோவை நோக்கி அடுத்தடுத்து ட்ரோன்கள் படை எடுத்ததாகவும் மேயர் சோபியான்ன் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இது என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) தகவல் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire