ரஷ்யாவின் மிரட்டலுக்கு பிரித்தானியா பதிலடி
18 ஆவணி 2026 செவ்வாய் 16:18 | பார்வைகள் : 306
ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்ததற்கு பிரித்தானியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய தயாரிப்புகளான ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ரஷ்யாவாளது பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
ஒன்றில், லண்டன் ஒருபக்கம் அமைதி வேண்டும் என கூறிக்கொண்டே மறுபக்கம் வேண்டுமென்றே உக்ரைன் பிரச்சினையை பெரிதுபடுத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லண்டனின் நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவுடனான மோதலில் பிரித்தானியாவின் ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, உக்ரைனுக்கு அது எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறதோ, அந்த அளவுக்கு பிரித்தானியா விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து செய்தி ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர், பிரித்தானியா உக்ரைனுடன் தோளோடு தோளாக நிற்கிறது.
ரஷ்யாவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக உக்ரைன் தன்னைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான தளவாடங்களை உக்ரைனுக்குக் கொடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், உக்ரைனிலும், பிரித்தானியா மற்றும் எங்கள் கூட்டாளிகளுக்கு எதிராகவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பதில் இந்த அரசாங்கத்தின் உறுதியைப் பற்றி ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது பிரித்தானிய தரப்பு.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire