கொலம்பியாவில் நிலநடுக்கம் - புதிய பாடசாலைகளை நிர்மாணிக்க முன்வந்துள்ள பிரபல பாடகி
18 ஆவணி 2026 செவ்வாய் 17:24 | பார்வைகள் : 192
கடந்த வாரம் கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியால் நிலைகுலைந்துள்ள மேற்கத்திய மாகாணமான சொக்கோவில் சேதமடைந்த கல்வி நிலையங்களைச் சீரமைக்கும் வகையில், குறைந்தது 10 புதிய பாடசாலைகளை நிர்மாணிக்க உதவப்போவதாகப் புகழ்பெற்ற அந்நாட்டு பாடகி ஷகீரா உறுதியளித்துள்ளார்.
திங்கட்கிழமை 17.08.2026 சொக்கோ மாகாணத்தின் தலைநகரான கிப்டோவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள ஷகீரா, பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை நேரில் பார்வையிட்டு மாணவர்களைக் கட்டித்தழுவி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
"இந்த அவசரநிலை முடிந்தவுடன் பாடசாலைகள் மீளக் கட்டியெழுப்பப்படாமல் போகுமோ என்பதே எனது முதன்மை கவலை.
சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாத ஒவ்வொரு நாளும், அவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழக்கும் நாளாகும்" என ஊடகவியலாளர்களிடம் ஷகீரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஷகீராவின் 'பியஸ் டெஸ்கால்சோஸ்' அறக்கட்டளையுடன் இணைந்து தொழிலதிபர் ஹெவார்ட் பஃபெட்டின் அறக்கட்டளை, 'குளோபல் சிட்டிசன்' மற்றும் 'லைவ் நேஷன்' ஆகிய அமைப்புகள் தலா 500,000 அமெரிக்க டொலர்களை இத்திட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒகஸ்ட் 10 ஆம் திகதி கொலம்பியாவின் மேற்கில் ஏற்பட்ட 7.4 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியால் இதுவரை 287 பேர் உயிரிழந்துள்ளதோடு, 26,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
பூமியதிர்ச்சியின் மையப்பகுதியாக அமைந்த சொக்கோ மாகாணத்தில் மாத்திரம் 265 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,100 க்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
பிரெஞ்ச் சுவிட்சர்லாந்தின் அளவிற்குப் பரப்பளவு கொண்ட இம்மாகாணம் ஆப்ரோ-கொலம்பிய மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் மிகவும் ஏழ்மையான பகுதியாகும்.
"கொலம்பியாவின் வரலாற்று ரீதியாகக் கைவிடப்பட்ட இப்பகுதியை நாங்கள் கைவிட மாட்டோம்; ஒவ்வொரு சிறுவரும் மீண்டும் பாடசாலைக்கு சென்று தங்கள் கனவுகளைத் தொடரும் வரை எங்கள் அர்ப்பணிப்பு தொடரும்" என ஷகீரா உறுதியளித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire