Paristamil Navigation Paristamil advert login

30 கிமீ மைலேஜ் - புதிய மாருதி பாலினோ அடுத்த மாதம் அறிமுகம்

30 கிமீ மைலேஜ் - புதிய மாருதி பாலினோ அடுத்த மாதம் அறிமுகம்

18 ஆவணி 2026 செவ்வாய் 15:48 | பார்வைகள் : 167


புதிய மாருதி பாலினோ அறிமுகமாகவுள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் தனது பிரீமியம் ஹாட்ச்பேக் பலினோ காரின் புதிய பதிப்பை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.

செப்டம்பர் 5 அன்று வெளியாகும் இந்த பலினோ ஃபேஸ்லிஃப்ட் மாடல், வெறும் வெளிப்புற மாற்றங்களைக் கொண்டதல்ல, பல முக்கிய தொழில்நுட்ப மேம்பாடுகளையும் கொண்டிருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது பலினோ விலை ரூ.7.03 லட்சம் முதல் ரூ.10.65 லட்சம் வரை உள்ளது. புதிய மாடலில் விலை சிறிதளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்புற மாற்றங்கள்:
புதிய கிரில் வடிவமைப்பு
அலாய் வீல்கள்
முன் மற்றும் பின்புற பம்பர்கள்
புதுப்பிக்கப்பட்ட ஹெட்லாம்ப் மற்றும் டெய்ல்லாம்ப்

உட்புற மாற்றங்கள்:
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்
அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தொடரும்
சன்ரூஃப் சேர்க்கப்பட வாய்ப்பு

புதிய பாலினோவில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் (டிசைர், ஸ்விஃப்ட் மாடல்களில் பயன்படுத்தப்படும்) வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு, இந்த என்ஜினில் சீரிஸ்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் சேர்க்கப்படும். இதன் மூலம் 28-30 கிமீ/லிட்டர் மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவலும் உள்ளது. ஹைப்ரிட் மாடல், பெட்ரோல் மற்றும் CNG பதிப்புகளுடன் இணைந்து விற்பனை செய்யப்படும்.

 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2