முதல்-அமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவது ஏன்? ஆதவ் அர்ஜுனா
19 ஆவணி 2026 புதன் 06:34 | பார்வைகள் : 224
சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த முதல்-அமைச்சர் அலுவலகம், நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளது.
இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் புதிய முதல்-அமைச்சர் அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதிய முதல்-அமைச்சர் அலுவலகத்தை அமைக்கும் பணிக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை டெண்டர் கோரியிருந்தது. இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
### ஆதவ் அர்ஜுனா விளக்கம்
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து கூறியதாவது:
"திமுக கொறடா எ.வ.வேலு பேசும்போது பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் வெளியான பத்திரிகை செய்திகளை எடுத்துப் பார்த்தால், இந்தத் துறை (பொதுப்பணித்துறை) ஊழல் மட்டுமே செய்திருக்கும் என்று எங்களாலும் கூற முடியும்.
ஆனால், தற்போது குறிப்பிடப்படும் டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பொதுவாக கட்டுமானப் பணிகளின் மதிப்புக்கு ஏற்ப டெண்டரின் மொத்த மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதில் 3 முதல் 7 சதவிகிதம் வரை தொகை அதிகரிக்கப்படும். ஆனால், நாங்கள் கடந்த ஆண்டின் மதிப்பீட்டையே பயன்படுத்தியுள்ளோம்.
விரைவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற டெண்டர்கள் தொடர்பான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளோம். கடந்த 60 நாட்களில் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது சுமார் 25 முதல் 30 சதவிகிதம் வரை குறைவான தொகைக்கு டெண்டர்கள் கிடைத்து வருகின்றன.
### தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம்
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் விரும்பினர். இதில் அனைவருக்கும் உடன்பாடு உள்ளது.
முதல்-அமைச்சர் காலை முதல் மாலை வரை அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். அனைவரையும் சந்திக்க வேண்டியிருப்பதால் அலுவலக அறையை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
முதல்-அமைச்சரின் தனிச் செயலர்கள் 100 சதுர அடிகூட இல்லாத சிறிய அறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகூட இல்லை. எனவே, அவர்களுக்கான அலுவலக அறைகளும் மாற்றப்படுகின்றன.
பிரசாரத்தின்போது சாதாரணக் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு, பிரசார வாகனத்திலேயே இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கக்கூடிய எளிமையான முதல்-அமைச்சரைப் பற்றி தவறான தகவல்களை அவைக்கு தெரிவிக்க வேண்டாம்" என்று அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire