காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் ஏன்? - எ.வ.வேலு கேள்வி
19 ஆவணி 2026 புதன் 08:40 | பார்வைகள் : 207
### மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்
சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட்டுகள் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் கடந்த 12-ந்தேதி தங்களது பதிலுரையை வழங்கினர்.
இந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து வருகின்றனர்.
### காமராஜர் பெயர் குறித்து கேள்வி
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"தி.மு.க. ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் அமைத்து கொடுத்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில்தான் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தோம்.
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் உணவுத் திட்டம் என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? வேறு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கு காமராஜர் பெயரை வைக்கலாமே? நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு நீங்கள் ஏன் பெயர் வைக்க வேண்டும்?
'முதலமைச்சர்' என்பது பொதுவான சொற்றொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. அதனால்தான் 'முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்' என்று பெயர் வைத்தோம். ஆனால் அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன்?
'ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்' என்று பெயர் வைக்கலாம் என்று கூறியபோது, ஸ்டாலின் அதனை மறுத்தார். 'முதல்வர் காலை உணவுத் திட்டம்' என்று பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்திற்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே கேள்வி.
காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து, பிரதமர் நேருவை அழைத்து வந்து திறந்து வைத்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா.
காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தவரும் கருணாநிதிதான்" என்று தெரிவித்தார்.
### தந்தை பெரியார் நூலகம்
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, "தந்தை பெரியாரை கொள்கை தலைவர் என்கிறீர்கள். த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், கோவையில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நூலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பொதுப்பணித்துறை அமைச்சர் பிறந்த வடஆற்காடு மாவட்டம், இன்று அது வேலூர் மாவட்டம்" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நான் பிறந்தது திருச்சி மாவட்டம் என்பதை பதிவு செய்கிறேன். நாங்கள் பெரியார் கொள்கையை பின்பற்றுவதாக தம்பட்டம் அடிப்பதாக பேசினார். இன்றும் அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை. எங்கள் அலுவலகத்தில் பெரியார் சிலை உள்ளது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது, மானியக் கோரிக்கை தொடர்பான கருத்துகளை மட்டும் பேசுமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குறுக்கிட்டு அறிவுறுத்தினார். அப்போது எ.வ.வேலு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையேயான உரையாடலை முதல்-அமைச்சர் விஜய் கூர்ந்து கவனித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire