Paristamil Navigation Paristamil advert login

"France Rénov" இணையத்தளம் மீண்டும் திறப்பு: 4 வகையான வீட்டு உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!

"France Rénov" இணையத்தளம் மீண்டும் திறப்பு: 4 வகையான வீட்டு உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!

18 ஆவணி 2026 செவ்வாய் 21:31 | பார்வைகள் : 716


France Rénov' இணையதளம் ஆகஸ்ட் 17, 2026 முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வீட்டு புதுப்பிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பல்வேறு அரசாங்க உதவிகளுக்கு ஒரே கணக்கு மூலம் விண்ணப்பிக்க முடியும்.

முன்பு MaPrimeRénov', MaPrimeAdapt', Ma Prime Logement Décent போன்ற உதவிகளுக்கு வெவ்வேறு இணையதளங்கள் மற்றும் நடைமுறைகள் இருந்தன. தற்போது France Rénov' அனைத்திற்கும் ஒரே நுழைவாயிலாக மாற்றப்பட்டுள்ளது.

முக்கியமாக கிடைக்கும் 3 உதவிகள்:

  1. MaPrimeRénov-வீட்டின் ஆற்றல் திறனை மேம்படுத்தும் பணிகளுக்கு — உதாரணமாக, வெப்பமூட்டும் அமைப்பு, காற்றோட்ட வசதி போன்றவற்றுக்கு நிதியுதவி கிடைக்கலாம்.
  2. MaPrimeAdapt-வயது முதிர்வு அல்லது சுயமாக இயங்குவதில் ஏற்படும் சிரமங்களுக்கு ஏற்ப வீட்டை மாற்றியமைக்க உதவும் திட்டம்.
  3. Ma Prime Logement Décent -மிகவும் மோசமான நிலையில் அல்லது பாதுகாப்பு/வசிப்பதற்கான தரநிலைகளை பூர்த்தி செய்யாத வீடுகளை சீரமைப்பதற்கான உதவி.

புதிய நடைமுறை எப்படி இருக்கும்?

ஆகஸ்ட் 17 முதல், குடும்பங்கள் France Rénov' இணையதளத்தில் ஒரு தனிப்பட்ட கணக்கை உருவாக்க வேண்டும். அந்தக் கணக்கிலிருந்து, உங்கள் நிலைமை மற்றும் செய்ய வேண்டிய பணிகளுக்கு ஏற்ற உதவித் திட்டத்திற்கு அமைப்பு உங்களை வழிநடத்தும். ஏற்கனவே உள்ள தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களும் புதிய கணக்கில் இணைக்கப்பட வேண்டும். இதற்காக FranceConnect+ மூலம் கணக்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 1, 2026 முதல் MaPrimeRénov' “rénovation d'ampleur” திட்டத்தில் புதிய மாற்றம் வருகிறது: சில சூழ்நிலைகளில் புதுப்பிப்பு பணிகளுக்குப் பிறகும் எரிவாயு (gaz) மூலம் இயங்கும் heating system-ஐ வைத்திருந்தால் அந்த உதவி வழங்கப்படாது.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2