Paristamil Navigation Paristamil advert login

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித்ஷா இன்று தமிழகம் வருகை

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித்ஷா இன்று தமிழகம் வருகை

19 ஆவணி 2026 புதன் 10:01 | பார்வைகள் : 178


தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாடு, மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். ஆறு மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று இரவு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர், மாநாடு நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு செல்கிறார். அங்கு முதல்வர்களுடன் நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்கிறார்.

நாளை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலுக்கு அமித் ஷா செல்கிறார். அங்கு தரிசனம் முடித்துவிட்டு சென்னை திரும்பும் அவர், பின்னர் டில்லி செல்ல உள்ளார்.

இதற்கிடையே, அமித் ஷாவின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2