ரூ.3,070 கோடியில் 405 பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு
19 ஆவணி 2026 புதன் 12:05 | பார்வைகள் : 178
தேஜஸ் விமானம், டாங்கிகள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் 405 முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.3,070 கோடி செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், சமீப காலமாக உள்நாட்டிலேயே ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை தயாரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் விளைவாக, ஆண்டுதோறும் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் 405 முக்கியத்துவம் வாய்ந்த தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பட்டியலை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை வெளியிட்டுள்ளது.
ரூ.3,070 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்பை உருவாக்கக்கூடிய இந்தப் பட்டியலில், இந்தியக் கடலோரக் காவல்படைக்கான 16 பொருட்களும், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களுக்கான 389 பொருட்களும் இடம்பெற்றுள்ளன. போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் பல்வேறு முக்கிய பாதுகாப்பு அமைப்புகளுக்கான உதிரிபாகங்களும் இதில் அடங்கும்.
குறிப்பாக சுஹாய் Su-30MKI, தேஜஸ் LCA விமானங்கள், ஹெலிகாப்டர்கள், T-72 மற்றும் T-90 டாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளுக்கான பாகங்கள் இனி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
இந்த நடவடிக்கை இந்தியாவின் உற்பத்தித் துறையில் தன்னிறைவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டு தொழில் வளர்ச்சி பெறுவதுடன், இந்தியாவில் வேலைவாய்ப்புகளும் உருவாகும். மேலும், பாதுகாப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி செலவும் குறையும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire