Paristamil Navigation Paristamil advert login

வாங்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படும்: நயினார் எச்சரிக்கை

வாங்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படும்: நயினார் எச்சரிக்கை

19 ஆவணி 2026 புதன் 14:12 | பார்வைகள் : 165


தமிழக அமைச்சர்கள் ‘வாங்கும்’ விவரங்கள் குறித்து விரைவில் வெளியிடப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

**தூத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:**

கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த காலகட்டத்தை மக்களுக்கு வேதனையான நாட்களாகவே கருதுகிறேன். இந்த அரசின் அமைச்சர்கள் அனைவரும் தங்களது ‘வேலை’யை தொடங்கிவிட்டனர்; அனைத்து விதமான விஷயங்களையும் ஆரம்பித்துவிட்டனர்.

இதன் பொருள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். யார், எங்கு ‘வாங்குகின்றனர்’ என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது. முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் நடைபெறும் டெண்டர் முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவோம்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2