Paristamil Navigation Paristamil advert login

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு

19 ஆவணி 2026 புதன் 15:22 | பார்வைகள் : 231


பி.எம். கேர்ஸ் எனப்படும் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியின் மொத்த இருப்பு, 2024-25-ம் நிதியாண்டில் ரூ.8,452.95 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய 2023-24-ம் நிதியாண்டில் இந்த நிதியின் இருப்பு ரூ.7,173 கோடியாக இருந்தது.

கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 'பி.எம். கேர்ஸ்' நிதியம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியின் மூலம் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பி.எம். கேர்ஸ் நிதிக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களும் நன்கொடைகளை வழங்கி வருகின்றன. இந்த நிதியத்தின் தணிக்கை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

### நிதி இருப்பு அதிகரிப்பு

தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களின்படி, 2023-24-ம் நிதியாண்டில் பி.எம். கேர்ஸ் நிதியின் மொத்த இருப்பு ரூ.7,173 கோடியாக இருந்தது. இது 2024-25-ம் நிதியாண்டில் ரூ.8,452 கோடியாக அதிகரித்து சாதனை அளவை எட்டியுள்ளது.

இதில் ரூ.6,641 கோடி வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.475 கோடி வட்டி வருவாய் கிடைத்துள்ளது. ஏற்கனவே வைப்பில் இருந்த நிதி மூலம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

### நன்கொடைகள் குறைந்தன

இதற்கிடையே, உள்நாட்டு நன்கொடைகள் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.681.81 கோடியாக இருந்த நிலையில், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.479.05 கோடியாக குறைந்துள்ளது.

அதேபோல், வெளிநாட்டு நன்கொடையும் ரூ.11.35 லட்சத்தில் இருந்து ரூ.9.28 லட்சமாக குறைந்துள்ளது.

மேலும், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட தேவைகளுக்காக பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.87.85 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

நன்கொடைகள் குறைந்திருந்தாலும், ஏற்கனவே வைப்புத்தொகையாக வைக்கப்பட்டிருந்த நிதிக்கு கிடைத்த வட்டி வருவாய் காரணமாக 2024-25-ம் நிதியாண்டில் பி.எம். கேர்ஸ் நிதியின் மொத்த இருப்புத்தொகை அதிகரித்துள்ளது என்று தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2