144 கிலோ போதைத் தாவரத்துடன் சிக்கிய பயணி – Roissy விமான நிலையத்தில் அதிரடி கைது!!
19 ஆவணி 2026 புதன் 07:25 | பார்வைகள் : 681
Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் இஸ்ரேலின் Tel Aviv நகரிலிருந்து வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் 144 கிலோ ‘காத்’ (khat) தாவரத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ள ‘காத்’ தாவரம், நாட்டுக்குள் கொண்டு வரத் தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர், ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Bobigny நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த 144 கிலோ ‘காத்’ கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பயணி சுங்கக் காவலில் வைக்கப்பட்டார். ‘காத்’ இலைகளை மென்று பயன்படுத்தும் பழக்கம் Yemen மற்றும் Ethiopia, Somalia உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பகுதிகளில் பரவலாக உள்ளது. இதன் தாக்கம் ஆம்பெட்டமைன் போன்ற தூண்டுதல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டு 3.5 தொன் ‘காத்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டில் 5 தொன்னுக்கும் அதிகமாகவும், 2023ஆம் ஆண்டில் 7 தொன்னாகவும், 2022ஆம் ஆண்டில் சுமார் 16 தொன்னாகவும் இருந்தது. இதேவேளை, 2022ஆம் ஆண்டு Spain-ல் ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ‘காத்’ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது; அதன் மதிப்பு சுமார் 61 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire