அஜித் படத்தில் இருந்து மோகன்லால் விலகினாரா ?
19 ஆவணி 2026 புதன் 11:36 | பார்வைகள் : 172
குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குகிறார் அஜித்தின் மனைவி ஷாலினி. தனது ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் வாயிலாக அவர் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படக்குழுவில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் Mohanlal இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சம்பளம் தொடர்பான பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் கருத்து வேறுபாடா என்பதற்கான தெளிவான தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து படக்குழு அல்லது மோகன்லால் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாததால், விலகலுக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire