கத்தி முனையில் மாற்றுத்திறனாளி: வங்கியில் 2,000 யூரோக்கள் பறிக்க முயன்ற நபர் கைது!!
19 ஆவணி 2026 புதன் 13:54 | பார்வைகள் : 266
Neuilly-sur-Marne பகுதியில் உள்ள La Banque Postale வங்கிக்கு ஆகஸ்ட் மாதம் 19ஆம் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளி ஒருவர் 2,000 யூரோக்கள் பணத்தை எடுக்க வந்துள்ளார். அவர் கேட்ட தொகை குறித்து சந்தேகம் அடைந்த வங்கி ஆலோசகர், அவர் பணத்தை கட்டாயப்படுத்தி எடுக்கச் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், வங்கியில் இருந்த மற்றொரு நபரை கைது செய்தனர். அவரிடம் கத்தி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, மாற்றுத்திறனாளியிடம் 2,000 யூரோக்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துத் தன்னிடம் கொடுக்கச் சொல்லியதாக சந்தேகிக்கப்படுகிறது.
வங்கி ஆலோசகரின் விழிப்புணர்வால் பணம் பறிக்கப்படுவதற்கு முன்பே காவல்துறையினர் தலையிட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire