அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம்!
20 ஆவணி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 200
தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
கடந்த 12-ந்தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசுகையில், "நான் 280 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சட்டசபைக்கு வருகிறேன். அதற்காக பயணப்படி வழங்கப்படுகிறது. ஆனால், எனக்கு சொந்தமாக வாகனம் இல்லை. வாடகைக்கு வாகனம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
எனது தொகுதியில் 40 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்வதற்கு வாகன வசதி இல்லை. அதேபோல், ஒரு உதவியாளரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்கும் அளவுக்கும் என்னிடம் வசதி இல்லை. இங்குள்ள எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் இதே நிலைமையில்தான் உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் கார் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
### 110 விதியின் கீழ் அறிவிப்பு
இதையடுத்து, வசதி குறைந்த மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்களில் யார் யாருக்கு கார் உள்ளிட்ட உதவிகளை அரசு சார்பில் வழங்க முடியும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசித்து வந்தார். இதுதொடர்பான அறிவிப்பு சட்டசபையில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
### அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்
அப்போது, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
அதன்படி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடரவும், தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்ளவும் வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், எம்.எல்.ஏ.க்கள் உதவியாளர்களை நியமித்துக்கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் படி வழங்கப்படும். ஓட்டுநர், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரம் படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire