3 துறைகளின் கோப்புகள் என் மேசையில் உள்ளன: விஜய்
20 ஆவணி 2026 வியாழன் 06:01 | பார்வைகள் : 297
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின்போது, திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்தார்.
இதற்கிடையே, திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
### சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
இதையடுத்து, சட்டென்று எழுந்து பேசிய முதல்-அமைச்சர் விஜய் கூறியதாவது:
"இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், எதிர்க்கட்சியினர் ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நிதி அமைச்சர் பேசும்போது, 3 துறைகள் குறித்து ஆய்வு செய்த கோப்புகள் எனது மேசையில் இருப்பதாக தெரிவித்தார்.
அதை அவர் (நிதி அமைச்சர்) போகிற போக்கில் சொல்லவில்லை. உண்மையிலேயே அந்த கோப்புகள் எனது மேசையில்தான் இருக்கின்றன. அவை அனைத்தும் ஆதாரங்களுடன் உள்ளன.
அவற்றை ஓபன் பன்ன வச்சிராதீங்க. எதை எப்போது வெளியிட வேண்டுமோ, அந்த நேரத்தில் அனைத்தும் சரியாக வெளியிடப்படும்.
மக்களிடம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை பேசிய பிறகுதான் எங்களை அன்பாகவும், ஆசையாகவும் இங்கே (சட்டசபைக்குள்) அழைத்து வந்து உட்கார வைத்துள்ளனர்.
நான் பேசுவேன். பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை. இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல" என்று அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire