பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை - முத்தரப்பு தொடர் அட்டவணை வெளியீடு

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை - முத்தரப்பு தொடர் அட்டவணை வெளியீடு

19 ஆவணி 2026 புதன் 16:10 | பார்வைகள் : 362


இலங்கை, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள முத்தரப்பு தொடரின் அட்டவணை வெளியாகியுள்ளது.

இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபரில் நடைபெற உள்ளன.

பாகிஸ்தானின் மைதானங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் பங்கேற்க இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன.

அக்டோபர் 18-ஆம் திகதி தொடங்கி, 31-ஆம் திகதி வரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டி அட்டவணை:

பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 18 (ராவல்பிண்டி)
பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 20 (ராவல்பிண்டி)
இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 22 (ராவல்பிண்டி)
பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 25 (கடாஃபி)
பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 27 (கடாஃபி)
இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 29 (கடாஃபி)
இறுதிப்போட்டி - அக்டோபர் 31 (கடாஃபி)     
 

தொடர்ந்து படிக்க