Paristamil Navigation Paristamil advert login

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புதிய Gorkha Edition வெளியீடு

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புதிய Gorkha Edition வெளியீடு

19 ஆவணி 2026 புதன் 16:18 | பார்வைகள் : 243


ராயல் என்ஃபீல்டின் புதிய Classic 350 Gorkha Edition குறித்து இங்கே பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான Classic 350 மோட்டார் சைக்கிளின் புதிய Gorkha Edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.2.10 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பதிப்பு, நேபாளத்தின் கோர்கா படையினரின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பில் தனித்துவமான மிலிட்டரி-ஸ்டைல் பேட்ஜ்கள், புதிய நிறங்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதோடு, ராயல் என்ஃபீல்டு "Gorkha Gear Collection" என்ற புதிய ஆடை மற்றும் உபகரணத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. இதில் ஜாக்கெட்டுகள், ஹெல்மெட்டுகள், கையுறைகள் மற்றும் பயண உபகரணங்கள் அடங்கும்.

Classic 350 Gorkha Edition, 349cc எஞ்சின், 20.2 bhp சக்தி, 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இது அபிமானிகளுக்கான சேகரிப்பு பதிப்பு என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வெளியீடு, ராயல் என்ஃபீல்டின் பாரம்பரியத்தையும், சாகச உணர்வையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2