ஆபத்தான பக்கவிளைவுகள்: ‘Tavneos’ மருந்து சந்தையில் இருந்து நீக்கம்!!
19 ஆவணி 2026 புதன் 20:12 | பார்வைகள் : 291
அரிதான தன்னைத்தானே தாக்கும் நோய்களுக்கு (maladies auto-immunes) சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வந்த Tavneos மருந்தை பிரான்ஸில் இருந்து திரும்பப் பெற சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த மருந்தை பயன்படுத்திய சில நோயாளிகளுக்கு கடுமையான கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டதுடன், ஜப்பானில் சுமார் 20 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது சுமார் 600 நோயாளிகள் இந்த மருந்தை பயன்படுத்தி வருவதாக ANSM தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு வரும் Tavneos தொடர்பாக கடுமையான கல்லீரல் பக்கவிளைவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அந்நாட்டில் மருந்தை விற்பனை செய்யும் Kissei நிறுவனம் தகவல் அளித்தது. இதையடுத்து ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் மருந்தின் நன்மை–ஆபத்து விகிதத்தை மீண்டும் ஆய்வு செய்தனர். இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் Tavneos-க்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு ஜூலை மாதம் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஐரோப்பிய ஆணையமும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது.
இதன்படி, 2026 ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் பிரான்ஸில் கிடைக்கும் Tavneos 10 mg மருந்தின் அனைத்து தொகுதிகளும் திரும்பப் பெறப்படுகின்றன. எனினும், நோயாளிகள் தாங்களாகவே மருந்தை உடனடியாக நிறுத்தக்கூடாது என ANSM எச்சரித்துள்ளது. மருத்துவரின் ஆலோசனையுடன் மாற்று சிகிச்சையை விரைவாக ஏற்பாடு செய்த பின்னரே மருந்தை நிறுத்த வேண்டும்; திடீரென சிகிச்சையை நிறுத்துவது நோய் தீவிரமடையச் செய்யக்கூடும் என்றும் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire