கென்யாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்து - ஏழு பேர் பலி
20 ஆவணி 2026 வியாழன் 06:35 | பார்வைகள் : 162
கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் 19.08.2026 உயிரிழந்தனர்.
ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் பார்வையிடப்பட்ட ஆர்ச்சர்ஸ் போஸ்ட் (Archers Post) பொலிஸ் நிலையத்தின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த ஹெலிகொப்டர் லோய்சாபா காப்பகத்தை நோக்கிப் பறந்துகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் குடியுரிமை தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.
தங்களது விருந்தினர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒலோலோக்வே மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire