Paristamil Navigation Paristamil advert login

ரேஷன் கார்டு விவரங்கள் திருட்டு அபாயம்: மத்திய அரசு எச்சரிக்கை

ரேஷன் கார்டு விவரங்கள் திருட்டு அபாயம்: மத்திய அரசு எச்சரிக்கை

20 ஆவணி 2026 வியாழன் 09:46 | பார்வைகள் : 148


தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு இருப்பதால், பொது வினியோக திட்ட இணையதளத்தின் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக உணவு வழங்கல் துறையை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ரேஷன் கார்டு பெறுவதற்கு, தமிழக அரசின் பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர்களை சேர்த்தல் அல்லது நீக்குதல், மொபைல் போன் எண்ணை மாற்றுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இதே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தின் பொது வினியோக திட்டம் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் இணையதளத்தின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கணினி அவசர கால பதிலளிப்பு குழு, தமிழக உணவு வழங்கல் துறையை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, தமிழக பொது வினியோக திட்ட இணையதளத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்னுரிமை, அந்தியோதயா, முன்னுரிமையற்ற அரிசி, சர்க்கரை மற்றும் எந்தப் பொருளும் வாங்காதது என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 2.28 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த ரேஷன் கார்டுகளில் மொத்தம் 7.01 கோடி உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2