மும்பை 3.0 திட்டம்: ரூ.4,000 கோடி ஒதுக்கீடு
20 ஆவணி 2026 வியாழன் 11:52 | பார்வைகள் : 167
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நிலப்பற்றாக்குறை, அதிகரித்து வரும் வீட்டு வசதி தேவை மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நவி மும்பைக்கு அப்பால் புதிய மெகா சிட்டியை உருவாக்க மஹாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. ‘கே.எஸ்.சி. நியூ டவுன்’ என்ற பெயரில் இந்த புதிய நகரம் உருவாக்கப்பட உள்ளது.
மும்பையில் ஏற்பட்ட நிலப்பற்றாக்குறை காரணமாக, பழைய நகரப் பகுதிக்கு அடுத்ததாக நவி மும்பை உருவாக்கப்பட்டது.
### வளர்ச்சி
தற்போது நவி மும்பையிலும் நிலத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், மும்பை பெருநகரப் பகுதியில் எதிர்கால வளர்ச்சிக்காக புதிய இடம் தேவைப்படுகிறது. இதையடுத்து, ராய்காட் மாவட்டத்தின் உரான், பன்வெல் மற்றும் பென் தாலுகாக்களைச் சேர்ந்த 124 கிராமங்களை உள்ளடக்கி புதிய நகரை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்னாலா - சாய் - சிர்னர் என்பதன் சுருக்கமான ‘கே.எஸ்.சி. நியூ டவுன்’, 323.44 சதுர கி.மீ. பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய நகரத்துக்கான மேம்பாட்டு ஆணையமாக மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது.
மும்பை, நவி மும்பை மற்றும் ராய்கட் பகுதிகளை இணைக்கும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அருகில் இந்த புதிய நகரம் அமைய உள்ளது.
### போக்குவரத்து
அடல் பாலம், நவி மும்பை சர்வதேச விமான நிலையம், பன்வெல் - கர்ஜத் ரயில் பாதை, விரார் - அலிபாக் பல்வழி போக்குவரத்து வழித்தடம் மற்றும் மும்பை - புனே விரைவுச்சாலை ஆகியவை புதிய நகரத்தின் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்த உள்ளன.
‘மும்பை 3.0’ என அழைக்கப்படும் இத்திட்டத்துக்காக, 2026 - 27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நகரத்துக்கு தேவையான நிலங்களை 124 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன.
நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு மற்றும் புதிய நகரில் முன்னுரிமைகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.
மும்பை 3.0 திட்டத்தில் குடியிருப்பு மற்றும் தொழில் பகுதிகளுடன் தகவல் தொழில்நுட்ப மையங்கள், தரவு மையங்கள், நிதி சேவைகள், சுகாதாரம், கல்வி, சரக்கு போக்குவரத்து மையங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற உள்ளன.
மேலும், பசுமை மண்டலங்கள், காடுகள், கலப்பு பயன்பாட்டு குடியிருப்புகள் மற்றும் பல்வழிப் போக்குவரத்து இணைப்புகளுக்கும் இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire