Paristamil Navigation Paristamil advert login

அமித் ஷா சென்னை வருகை: முதல்வர் விஜய் சந்திப்பு

அமித் ஷா சென்னை வருகை: முதல்வர் விஜய் சந்திப்பு

20 ஆவணி 2026 வியாழன் 12:55 | பார்வைகள் : 155


சென்னையில் இன்று நடைபெறும் தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் கோவளம் நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித் ஷாவை, தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

சென்னையை அடுத்த கோவளத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அமித் ஷா தலைமை வகிக்கிறார்.

### நதிநீர் பிரச்னை

மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், தெலுங்கானா துணை முதல்வர் மல்லுபட்டி விக்ரமார்க்கா, புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் தென் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகள், நதிநீர் இணைப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

### காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சென்னை எழும்பூரில் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசு, அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி மறுவரையறை மற்றும் டில்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2