இடைத்தேர்தலிலாவது நல்லது நடக்க வேண்டும்: முதல்வர் விஜய்
20 ஆவணி 2026 வியாழன் 14:07 | பார்வைகள் : 176
“நான் பேசுவேன்; பேசக் கூடாது என இல்லை. இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்க வேண்டும் அல்லவா” என சட்டசபையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
**சட்டசபையில் நடந்த விவாதம்:**
**அமைச்சர் ராஜ்மோகன்:** அமைச்சர்கள் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர். அதற்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கின்றனர். நமது முதல்வர் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்திருக்கிறார். அவர் அவற்றை வெளியிட்டு எடுத்துக்காட்டினால், அவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது சற்று கவலையாக இருக்கிறது.
**முதல்வர் விஜய்:** இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், தொடர்ந்து ஆதாரம், ஆதாரம் என கேட்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு நிதி அமைச்சர் பேசும்போது, மூன்று துறைகள் தொடர்பாக ஆய்வு செய்து, அதற்கான விவரங்கள் தனது டேபிளில் இருப்பதாக தெரிவித்தார்.
அவர் ஏதோ போகிற போக்கில் அதை சொல்லவில்லை. உண்மையிலேயே அனைத்து ஆதாரங்களுடனும் அந்த விவரங்கள் எனது டேபிளில் உள்ளன. அவற்றை ‘ஓபன்’ செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தாதீர்கள். எதை, எப்போது ‘ஓபன்’ செய்ய வேண்டுமோ, அப்போது அதை சரியாக ‘ஓபன்’ செய்வோம்.
மக்களிடம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதையெல்லாம் ஏற்கனவே பேசி விட்டோம். மக்கள் அன்புடனும், ஆசையுடனும் எங்களை இங்கு அழைத்து வந்து அமர வைத்துள்ளனர்.
நான் பேசுவேன்; பேசக் கூடாது என்று இல்லை. இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்க வேண்டும் அல்லவா.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire