மின்வாரிய கொள்முதலில் ரூ.1,028 கோடி முறைகேடு: 60 இடங்களில் ரெய்டு
20 ஆவணி 2026 வியாழன் 15:12 | பார்வைகள் : 162
மின்வாரிய பொருட்கள் கொள்முதல் டெண்டர் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக் காலமான 2021 முதல் 2023 வரை, மின்வாரியத்திற்கு அலுமினிய கண்டெக்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மின் சாதனப் பொருட்கள் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்டன.
இந்த கொள்முதலில் சுமார் 1,028 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக, 2026 ஜூன் 30ம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
முதற்கட்ட விசாரணையில், கொள்முதல் நிறுவனங்கள் சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிகளில் பல, அரசின் இறுதி டெண்டர் மதிப்பைவிட குறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும், ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் ஒரே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின் விநியோகக் கழக அதிகாரிகளின் வீடுகள், அரசு ஊழியர்கள், தனிநபர்கள் மற்றும் கொள்முதல், விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (ஆக.19) அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் மொத்தம் 60 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது, முறைகேடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள், ஒப்பந்தப்புள்ளி கோரியது குறித்த டிஜிட்டல் பதிவுகள் மற்றும் போலி நிறுவனங்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கின.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire