Paristamil Navigation Paristamil advert login

திமுக புகாருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி

திமுக புகாருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி

20 ஆவணி 2026 வியாழன் 16:44 | பார்வைகள் : 151


சட்டசபையில் நடந்த விவாதம்:

திமுக - ஐ.பெரியசாமி: ‘வி.பி.ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசு, 150 நாள் வெற்றி திட்டம் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக திமுக ஆட்சியில் 2025ம் ஆண்டு 13,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இருப்பினும், தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 53 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடிந்தது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலும் அதே அளவிலான நாட்களுக்கு மட்டுமே பணி வழங்க முடியும்.

மத்திய அரசு தனது பங்களிப்பாக 7,000 கோடி ரூபாய் வழங்குவதாக கூறுவதும் உத்தேசம்தான். மாநில அரசு 5,057 கோடி ரூபாய் ஒதுக்கினாலும், அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க முடியாது. எனவே, அனைவருக்கும் 150 நாட்கள் வேலை வழங்க முடியுமா என்பதை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். அறிவிப்புகள் பேப்பரில் மட்டுமே உள்ளன; ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

அமைச்சர் ஆனந்த்: ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன், அதற்கான நிதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து முதல்வர் முடிவு செய்கிறார். இந்த ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது மூத்த எம்எல்ஏவின் மனதிற்கே தெரியும்.

நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எங்கள் முதல்வர் வந்துள்ளார். எனவே, திட்டங்கள் பேப்பரில் மட்டுமே இருப்பதாக கூற வேண்டாம். நாங்கள் பேசத் தொடங்கினால், இன்னும் பல விஷயங்களை பேச வேண்டியிருக்கும்.

எந்த ஆலோசனையாக இருந்தாலும், மூத்த எம்எல்ஏ எங்களிடம் தாராளமாக தெரிவிக்கலாம். 234 தொகுதிகளுக்கும் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் தயாராக இருக்கிறார். மூத்த எம்எல்ஏ பேசும்போது அவருக்கு பதில் அளிக்க சங்கடமாக உள்ளது. தொகுதி சார்ந்த விஷயமாக இருந்தாலும், மாவட்டம் தொடர்பான பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் தெரிவியுங்கள்; அதை செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2