Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ்–ஈரான் மோதல் தீவிரம்: இரு ஈரான் தூதர்கள் விரைவில் வெளியேற்றம்!!

பிரான்ஸ்–ஈரான் மோதல் தீவிரம்: இரு ஈரான் தூதர்கள் விரைவில் வெளியேற்றம்!!

20 ஆவணி 2026 வியாழன் 07:28 | பார்வைகள் : 345


பிரான்ஸில் உள்ள இரு ஈரான் தூதர்கள் அடுத்த சில நாட்களில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என  வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரு தூதர்களை persona non grata என அறிவித்து நாட்டை விட்டு வெளியேற ஈரான் உத்தரவிட்டதற்கு பதிலடியாகவே பிரான்ஸ் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஈரானில் கடந்த ஜூலை மாதம் பிரெஞ்சு தூதர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் தாக்கப்பட்டதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஜூலை மாதம் 19ஆம் திகதி ஈரான் பாதுகாப்பு அதிகாரிகளால் பிரெஞ்சு தூதர்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக Jean-Noël Barrot தெரிவித்திருந்தார். ஈரான் தரப்போ இதனை மறுத்து, அதிகாரிகளால் தூதர்கள் குறுகிய நேரம் மட்டுமே விசாரிக்கப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், பிரான்ஸ் ஈரானில் செல்வாக்கை ஏற்படுத்தவும், நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கவும் முயன்றதாக ஈரான் உளவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த பிரான்ஸ், ஈரான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பிரெஞ்சு தூதர்களை சந்தித்த பின்னர் ஈரானிய கலைஞர்களான Aria Kasaei மற்றும் Elly Naghilou ஆகிய இருவரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி Téhéran-ல் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்–ஈரான் உறவுகள் பல ஆண்டுகளாக கடுமையான பதற்றத்தில் இருந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக மோதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானில் 2023ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் ஏழு பிரெஞ்சு பிரஜைகள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைசியாக கைது செய்யப்பட்டிருந்த Cécile Kohler மற்றும் Jacques Paris ஆகியோர் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஈரானை விட்டு வெளியேறியிருந்தனர்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2