Paristamil Navigation Paristamil advert login

Nanterre நகரில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு!!

Nanterre நகரில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு!!

20 ஆவணி 2026 வியாழன் 13:00 | பார்வைகள் : 255


Nanterre நகரின் Pablo-Picasso குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி புதன்கிழமை பாரிய காவல்துறை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தவும், குற்றவலைப்பின்னல்களுக்கு எந்தவித இடைவெளியும் வழங்காமல் நடவடிக்கை எடுக்கவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பிற்பகல் சுமார் 4 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், CRS படையினர் மற்றும் பல்வேறு சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் Pablo-Picasso பகுதியில் களமிறங்கினர். அடுக்குமாடிக் கட்டிடங்களின் நுழைவுப் பகுதிகள் சோதனை செய்யப்பட்டதுடன், வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் அடையாளச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. 

இந்த நடவடிக்கை மூலம் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிரான அழுத்தத்தை தொடர்ந்து அதிகரிக்க முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர். சமீபத்திய நடவடிக்கைகளால் அப்பகுதியில் செயல்பட்டுவந்த வலையமைப்பு ஏற்கனவே வலுவிழந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இருப்பினும், குற்றவலையமைப்புகள் மீண்டும் தலைதூக்காமல் தொடர்ந்து கண்காணிப்பும் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2