Paristamil Navigation Paristamil advert login

செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தி

செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தி

20 ஆவணி 2026 வியாழன் 16:49 | பார்வைகள் : 176


செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி வைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான செர்பியாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

பலத்த காற்றின் காரணமாக தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவியுள்ள நிலையிலேயே இந்த வானுர்தி அனுப்பப்பட்டது.

இந்த வானுர்தியானது ஒரே தவணையில் சுமார் 42 டன் தண்ணீரை வானில் இருந்து தீ பிழம்புகள் மீது வாரி இறைத்து அணைக்கும் திறன் கொண்டது.

சிறப்பு மீட்புப் படை வீரர்களுடன் செர்பியா விரைந்துள்ள ரஷ்யாவின் இந்த உடனடி உதவிக்கு செர்பிய அரசு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2