Paristamil Navigation Paristamil advert login

நயன்தாரா திருப்பதியில் மொட்டை அடித்தாரா ?

நயன்தாரா திருப்பதியில் மொட்டை அடித்தாரா ?

20 ஆவணி 2026 வியாழன் 16:47 | பார்வைகள் : 180


யஷ் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகை நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டு வேண்டுதல் செய்ததாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், படத்திற்காக நயன்தாரா இவ்வளவு பெரிய வேண்டுதலை செய்தாரா என ஆச்சரியமடைந்தனர்.

ஆனால், வைரலாகும் இந்தப் புகைப்படங்கள் தத்ரூபமாக இருந்தாலும் அவை உண்மையானவை அல்ல. அந்த இரண்டு புகைப்படங்களுமே ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்டவையாம். கடந்த ஏப்ரல் மாதம் கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலுக்குச் சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தான் தற்போது ஏஐ மூலம் எடிட் செய்து அவர் மொட்டை அடித்திருப்பது போன்ற தோற்றத்தில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

குறிப்பாக, தற்போதைய ஏஐ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட புகைப்பட எடிட்டிங் கருவிகளின் உதவியுடன் ஒருவரின் முகம், தலைமுடி உள்ளிட்ட தோற்றங்களை மிக எளிதாக மாற்ற முடிகிறது. இதனால், உண்மையான புகைப்படங்களைப் போலவே தோன்றும் போலியான படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வரிசையில்தான் நயன்தாராவின் இந்த புகைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

படத்தில் யஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக அவருக்கு சுமார் ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் கீது மோகன்தாஸுக்கும் நயன்தாராவுக்கும் இடையே நீண்டகால நட்பு இருப்பதால், இந்தக் கூட்டணி மீதும் ரசிகர்கள் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

டாக்சிக் படம் ரிலீஸ் ஆன இரு தினங்களில் நயன்தாரா ஹீரோயினாக நடித்த மற்றொரு படமான ஹாய் திரைக்கு வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன். இப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி உள்ளார். இவர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். ஹாய் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் விஷ்ணு எடவன். இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளது மட்டுமின்றி அப்படத்தை தன்னுடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார் நயன்தாரா. ஒரே வாரத்தில் நயன்தாரா நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2