ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் இருந்து தற்காலிக ஓய்வு?
20 ஆவணி 2026 வியாழன் 17:30 | பார்வைகள் : 181
நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி, சூர்யாவை கதாநாயகனாக வைத்து இயக்கிய ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார். இதையடுத்து அவர் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் முன்பு கூறப்பட்டது.
இந்நிலையில், தனது அடுத்த இயக்குநர் படத்துக்கு செல்வதற்கு முன்பு ஆர்.ஜே. பாலாஜி சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளியில் அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கிடாரி’ திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன், பின்னர் மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘மத்தகம்’ இணையத் தொடரை இயக்கி கவனம் பெற்றவர். தற்போது இருவரும் இணையும் புதிய படம் குறித்த கூடுதல் தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire