“தண்ணீர் பிரிக்காமல், ஒன்றிணைக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்”
21 ஆவணி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 188
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்துள்ளனர். மேலும், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, கேரள முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
“தண்ணீர் நம்மை ஒன்றிணைக்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது. நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து, நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம் இது. ஒத்துழைப்பு அடிப்படையில் நதிநீர் பிரச்சினைகளை அணுக வேண்டும். ஆறுகளுக்கு அரசியல் எல்லைகள் தெரியாது.
கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும். நாங்கள் புகார் கூறுவதற்காக வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்கு தேவை நியாயம் மட்டுமே.
சமத்துவம், வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு ஆகியவையே கர்நாடகாவின் கொள்கைகள். மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் முக்கியமான திட்டமாகும். உங்களுக்கு உதவ, எங்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு துளி நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கும் உதவும்” என்று அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire